தலைவர் பிரபாகரன் அவர்களின் தூர நோக்கு பார்வையும் – தொடரும் மர்மமும்

In தமிழீழத் தேசியத்தலைவர்

தலைவர் பிரபாகரன் அவர்களின் தூர நோக்கு பார்வையும் – தொடரும் மர்மமும்

பலர் என்னிடம் கேட்ட கேள்விக்கான தெளிவு இந்த பதிவில் கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால் இதற்கான விடையை அறிய வேண்டும் என்றால் உங்களின் கடமைகள் என்ன என்பதை தெரிந்து விலைபோகாது கொள்கையோடு செய்து முடிக்க வேண்டும். சரி இனி தெளிவு பெறுவதற்கான வரலாற்று தடத்திற்குள் செல்வோம்.

2000ஆம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்த பின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துகொண்ட காலப்பகுதி.

ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம். அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் அது இலங்கை இராணுவத்துக்குதான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை இப்படி இருக்கும் போதுதான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது.

அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் ,அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது எரிக் சோல்கைம் என்றும், யஹூசி அஹாசி என்றும் ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலக அரசியல் தலைவர்களும், இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கைலாகு கொடுத்த காலமது.

கலகம் தீர்த்து வைப்பது நிட்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட!.

இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது பெரும் பாலும் யாருக்கும் தெரியாததும் கூட வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலை நகர் கிளிநொச்சி வருகிறார்.

எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார், அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார். எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள்,போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா!?. அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்.

“அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும், எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே ” என்று கேள்வியாகவும் கேட்டார்கள்.

எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார் எப்படி தெரியுமா..?

“இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ இனிமேல் தான் எமது இயக்கமும்,எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும், இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் ” என்று கூறினார்.

இதை கேட்ட தளபதிகளுக்கும், போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்தான்கள் பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009ல் பதில் கிடைத்தது அனைவருக்கும்.

பின்னடவை கணிக்க தெரிந்த அவருக்கு அதை எப்படி….? சீர் செய்ய வேண்டும் என்பது தெரியமலா போய் இருக்கும். அதைவிட இன்னும் சில விடயங்கள் அவர் கூறி இருந்தார்.

நாம் முன்பு கூறியது போல இந்த உலகமே எதிர்பாராத திருப்பு முனையோடு எம் தலைவர் பிரகாசிக்கும் போது அது என்னவென்று எல்லோருமே புரிந்து கொள்வார்கள். ஏன் என்றால் எந்த இனமுமே பெறமுடியாத ஒரு வீரமிகு ,ஆற்றல் மிகு தீர்கதரிசன மிகு, இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத தலைவரை நாம் பெற்றுள்ளோம். அவரின் காலத்தில் நாம் ஈழம் காண்பது உறுதி . அதுவரை எமது தலைமை எம்மிடம் தந்த பாரிய பொறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே,சீராக செய்து முடிக்க வேண்டும்.

ஈழப்பறவைகள் இணயத்துக்காக

-ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.