காலம் பிரசவித்த தமிழன்னையின் கரிகாலன்கள்

In தமிழீழத் தேசியத்தலைவர்

காலம் பிரசவித்த தமிழன்னையின் கரிகாலன்கள்

கரிகாலன் இந்த பெயர் வரலாறு பிரசவித்த தமிழன்னையின் பொக்கிசம் என்றே சொல்லலாம்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கரிகால சோழ பெருவளன் மன்னனுக்கு எவ்வாறு கரிகாலன் எனும் நாமம் வந்ததோ அதே போன்றுதான் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் கரிகாலன் எனும் நாமம் சூடப்பட்டது.

வரலாறுகள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையும் முறமையும் கொண்டவை வரலாற்றை கூர்ந்து ஆராயும்போது அதனை இலகுவாக தெரிந்து கொள்ளலாம். அதே போன்றுதான் தலைவரின் பிறப்புக்கும் சோழ வம்சத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தெளிவாக சொல்லப்போனால் தலைவர் பிரபாகரன் சோழ வம்சாவளியை சேர்ந்தவர் என்றே சொல்லலாம். இந்த வரலாறுகள் நாம் அறிந்ததே. சரி இனி கரிகாலன் எனும் வரலாற்று பதிவுக்குள் செல்வோம்

சோழ பெருவளன் மன்னனுக்கு கரிகாலன் என்ற பெயர் ஒரு காரணப் பெயர். கி.மூ 270ல் இருந்து கிபி 180க்கு இடைபட்ட காலத்தில் (ஆட்சிகாலம்) கரிகால சோழனுடைய சிறுவயதிலேயே அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். சரியான மன்னர் இல்லாது இருந்த சோழ நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. சோழர் பரம்பரைக்கு விசுவாசமாமாக இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கருவூரில் இருந்த சோழ இளவல் கரிகால சோழனை நாட்டை ஆளக் கூட்டிவந்தனர். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரிகால சோழன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் மத்தியில நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு ஏறிக்கொண்டே இருந்தது. இதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே மருவி கரிகால சோழனாக நிலைத்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கரிகால சோழன் அவருடைய மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசனத்தில் மன்னராக அமர்ந்தார்.

இதே போன்றுதான் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து தமிழீழ தேசத்தில் அதே வடிவில் ஒரு கரிகாலன் தோன்றினான் அவன்
உலக வரலாற்றை மாற்றியமைக்க போகின்றார் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் தமிழ் மக்கள் படும் துன்பம் கண்டு சிறு வயதிலையே கொதித்தெழுந்தார்

அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித்தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

தனது பதின் நான்கு வயதில் தரம் பத்தில் கல்வி பயிலும் போது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை தலைவர் பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் “கரிகாலன்” என்னும் புனைபெயரும் தலைவர் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது. இதுவே பின்னாட்களில் தேசியத் தலைவரின் இயக்க பெயராக மாறியது. இன்று இந்த கரிகாலன் எனும் நாமம் தமிழின் உயிர் நாடியாகவும் உலக புரட்சியின் குறியீடாகவும் திகழ்கின்றது.

ஈழம் புகழ் மாறன்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.