களமுனைகளின் சத்தம்
அடங்கியதால்
பித்தர் கூட்டத்தின்
நாடகங்கள் அரங்கேறியது
நாடகத்தின் கருப்பொருளே
தமிழினத்தின் அழிப்பு
விடுதலை உணர்வற்று
வீழ்ந்து விட விதைக்கின்றான்
போதை பொருட்களை
சூழ்ச்சுமம் தெரியாமல்
சுக போக வாழ்வென நினைத்து
சுருண்டே வீழ்கின்றனர்
எம் இனத்தின் அற நெறி
தெரியாத அடிமைகள்
தமிழினத்தை கருவறுக்கும்
கருப்பொருளாய் கதைகள்
தொடர்கதையாய்
நீண்டு கொண்டே செல்கிறது
யுத்த சத்தம் ஓய்ந்த மண்ணில்
மாறுமா எம் இனம் மாற்றுமா எம் துயர்
சிவா TE
(தமிழீழம்)