தியாகத்தின் உச்சம் தீயோடு சங்கமான தீரன்.
தியாகத்தின் உச்சம் தீயோடு சங்கமான தீரன்…..
தீயோடு உடல் கருகி
தீராத வலிதந்த
தீ தின்ற வீரனே
தியாகியே முத்துக்குமார்
மண்ணோடு நீ வீழ்ந்தாய்
மாசற்ற மறவனே
மறையாது உன் தியாகத்தின்
மணி மகுடமே
மங்காது உன் உயிர் கொடையே
பூவுடல் தியோடு
புன்னகை முகமும்
புது வரலாறு காணவே
புதையுண்டு போனதே
புதை குழியினுள்ளே
தேசமே கண்ணீரானது
தியாகத்தின் நிலை கண்டே
மனங்களும் ஏற்க மறுத்தது
உன் மரணத்தின் செய்தி கேட்டுமே
=சிவா TE=