ஈகைப்பேரொளி செந்தில்குமரன்

In தியாக சுடர்கள்

ஈகைப்பேரொளி செந்தில்குமரன்

தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவாவில் 05.09.2013 அன்று தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு புலத்தேசத்தில் இருந்து தமிழீழ விடிவிற்காய் போராடிய “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன் ஆகிய தமிழ்த் தேசிய உணர்வாளரின்  நினைவு வணக்கநாள் இன்றாகும்.

சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை. அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் உரையாடியுள்ளார். உரையாடும் போது, தமிழீழம் மலரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எனவும் இறுதியாகத் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பொய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு ஓய்ந்து போயுள்ளான் ஈகைப்பேரொளி செந்தில்குமரன். புலம்பெயர் மக்கள் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பினால் துடித்துள்ளார்கள். ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது போராட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான ஒரு அர்ப்பணிப்பை வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான். தாய்மண்ணின் தணியாத தாகத்துடன் ஆகுதியாகிய தமிழ்த் தேசிய உணர்வாளரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.